Published Date: December 15, 2025
CATEGORY: CONSTITUENCY

திருப்பரங்குன்றம் பகுதியில் மதுரை சிவகாசி நாடார்கள் உறவின்முறை முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள மதுரை திறன் மேம்பாட்டு கழகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை இயக்கும் இரண்டு விஷயங்களில் ஒன்று அனைவருக்கும் உலகளாவிய கல்வி. இதை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள பள்ளி கல்வியின் நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்கனவே எட்டிவிட்டது. மாணவர்கள் பள்ளி கல்வியோடு புதிய திறன்களையும் கற்க வேண்டும். தற்போதைய காலத்திற்கு ஏற்ப எந்தெந்த நவீன தொழில்நுட்ப திறன்கள் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நிபுணர்கள் தீர்மானித்து மாணவர்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க வேண்டும்.
இந்தத் திறன் மேம்பாட்டு கழகத்துக்கு, தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். திறன் மேம்பாட்டுக்கு சமூக அமைப்புகளும் தொலைநோக்கு எண்ணம் கொண்ட தொழில் முனைவோரும் அதிகம் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரெத்தினவேலு, தியாகராஜன் பொறியியல் கல்லூரி முதல்வர்.அசோக்குமார், திறன் மேம்பாட்டு கழக செயலாளர் முரளிபாபு அற்புதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media: Hindu Tamil